‘மாரி’ டீஸரில் ‘மரியான்’ ஞாபகம்!

‘மாரி’ டீஸரில் ‘மரியான்’ ஞாபகம்!

கட்டுரை 21-May-2015 11:50 AM IST Chandru கருத்துக்கள்

‘அனேகன்’ படத்திற்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். வடசென்னை ஏரியா தாதாவாக தனுஷ் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. அனிருத்தின் இசையில் ‘தர லோக்கல் ஆல்பம்’ விரைவில் வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘மாரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நேற்று யு டியூப்பில் வெளியாகி உள்ளது.

33 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த டீஸரில், மிரட்டலான பின்னணி இசை ஒலிக்க, சிகரெட் புகைத்தபடி ஸ்லோ மோஷனில் தனுஷ் அறிமுகமாகிறார். மொத்தமே இந்த ஷாட் மட்டுமே இந்த டீஸரில் இடம்பெற்றுள்ளது. ‘மரியான்’ படத்தின் 3வது டீஸரும் கிட்டத்தட்ட இதேபோல்தான் இருந்தது. அதில் வில்லனை அடித்துவிட்டு பீடியைப் புகைத்தபடி தனுஷ் வீட்டிற்குள்ளிலிருந்து வெளியே வருவார். இந்த ‘மாரி’ டீஸரைப் பார்த்ததும் ரசிகர்கள் பலருக்கும் ‘மரியான்’ ஞாபகம் வருவதாக ‘கமென்ட்’ செய்திருக்கிறார்கள்.உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;