ராஜேஷ் + உதயநிதி + சந்தானம் = மீண்டும் ஒரு ‘ஓகே ஓகே’

ராஜேஷ் + உதயநிதி + சந்தானம் = மீண்டும் ஒரு ‘ஓகே ஓகே’

செய்திகள் 21-May-2015 11:17 AM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ மூலம் ஹீரோவானார். இப்படத்தில் நாயகனுக்கு இணையான கேரக்டரில் நடித்து படத்தின் வெற்றிக்கு சந்தானமும் முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். இதனால் உதய்நிதி அதற்கு அடுத்த நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ ஆகிய இரண்டு படங்களிலும் சந்தானமே காமெடியனாகத் தொடர்ந்தார்.

தனது மூன்று படங்களுக்குப் பிறகு சந்தானத்தைவிட்டு தற்காலிகமாகப் பிரிந்த உதயநிதி தற்போது ‘கெத்து’, ‘இதயம் முரளி’ என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களில் கருணாகரன், தம்பி ராமையா என வேறு காமெடியன்களை நடிக்க வைத்துள்ளார். இந்நிலையில் தனது அறிமுக வெற்றிக்குக் காரணமான இயக்குனர் ராஜேஷ் மற்றும் சந்தானத்துடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆவலாக இருக்கிறாராம் உதயநிதி. அனேகமாக இப்படத்திற்கான வேலைகள் அடுத்த வருடம் ஆரம்பமாகலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - டிரைலர்


;