மெயின் ஸ்கிரீனுக்கு மாறும் ‘36 வயதினிலே’

மெயின் ஸ்கிரீனுக்கு மாறும் ‘36 வயதினிலே’

செய்திகள் 21-May-2015 10:41 AM IST Chandru கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்கு ஏ சென்டர்களில் அபரிதமான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் இப்படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் பார்த்து வருகின்றனர். வசந்தியாக நடித்திருக்கும் ஜோதிகா பெண் ரசிகைகளை வெகுவாகக் கவர்ந்துள்ளார். அவர் இப்படத்தில் உடுத்தியிருக்கும் சேலைகள் பெண்கள் மத்தியில் புதிய ஃபேஷனை உருவாக்கியிருக்கிறது.

கடந்த வாரம் சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் சாந்தம் தியைரங்கில் ரிலீஸான ‘36 வயதினிலே’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து நாளை முதல் (மே 22) மெயின் ஸ்கிரீனான ‘சத்யம்’ ஸ்கிரீனுக்கு இப்படத்தை மாற்றியுள்ளார்கள். இதனால் தயாரிப்பு நிறுவனம் சந்தோஷத்தில் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;