‘மாஸ்’ சென்சார் சான்றிதழ் : ரசிகர்கள் ஆச்சரியம்!

Masss Censored

செய்திகள் 21-May-2015 10:18 AM IST Chandru கருத்துக்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மாஸ்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து நேற்று இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படம் பார்த்த பின்னர், சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

வழக்கமாக திகில் படங்களுக்கு ஏ அல்லது யு/ஏ சான்றிதழ்தான் வழங்கப்படும். ஆனால் ‘மாஸ்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி சூர்யாவின் ரசிகர்களும் சந்தோஷ ஆச்சரியத்தில் உள்ளனர். இதனால் மாஸ் படத்தில் என்னமாதிரியான திகில் காட்சிகள் இருக்குமென ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் குடும்பச் சித்திரமாக உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

R K நகர் - டீசர்


;