சிபிராஜின் ‘ஜாக்சன் துரை’யில் ஹாலிவுட்டின் ‘கான்ஜுரிங்’ டச்!

சிபிராஜின் ‘ஜாக்சன் துரை’யில் ஹாலிவுட்டின் ‘கான்ஜுரிங்’ டச்!

செய்திகள் 20-May-2015 3:48 PM IST Chandru கருத்துக்கள்

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைத் தொடர்ந்து ‘ஜாக்சன் துரை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் சிபிராஜ். இப்படத்திற்காக கிட்டத்தட்ட 10 கிலோ எடையைக் குறைத்து இன்று முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் சிபிராஜ். ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தரணிதரன். ஒளிப்பதிவு யுவராஜ், இசை சித்தார்த் விபின், இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு என அருமையான கூட்டணியும் ‘ஜாக்சன் துரை’யில் இணைந்திருக்கிறது.

தமிழின் முதல் வரலாற்றுப் பேய் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் சிபிராஜுடன் சத்யராஜும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் பிந்துமாதவி, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். அதோடு ஹாலிவுட் நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கிறாராம்.

பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்காக ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்ற பேய்ப்படமான ‘கான்ஜுரிங்’ படத்தின் ஒப்பனை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவிருப்பதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. 1940களில் நடப்பதுபோல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள ‘ஜாக்சன் துரை’ காமெடி கலந்த திகில் படமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - டிரைலர்


;