இளம் இசையமைப்பாளர்களுக்காக யுவனின் U1Records

இளம் இசையமைப்பாளர்களுக்காக யுவனின் U1Records

செய்திகள் 20-May-2015 3:34 PM IST Chandru கருத்துக்கள்

இசையமைப்பாளராக 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா U1Records என்ற பெயரில் ஆடியோ நிறுவனம் ஒன்றையும், யு டியூப் வீடியோ சானல் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். இந்நிறுனத்தின் மூலம் தனிப்பட்ட ஆல்பங்களை தயாரித்து வெளியிடவிருக்கிறாராம் யுவன். அதோடு புதிய இசையமைப்பாளர்களையும் இந்நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

அதேபோல் தனது U1Records யு டியூப் சேனலில் தன்னுடைய இசையமைப்பில் உருவாகி வெளிவராத பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை வெளியிடவிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. ரசிகர்கள் இந்த யு டியூப் சேனலுக்கு சந்தாரர் ஆகி, யுவனின் இசை மழையில் நனையலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;