‘மாரி’ ரிலீஸ் தேதி மாற்றம்!

‘மாரி’ ரிலீஸ் தேதி மாற்றம்!

செய்திகள் 20-May-2015 1:53 PM IST VRC கருத்துக்கள்

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கும் படம் ‘மாரி’. தனுஷ், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை தனுஷின் வுண்ட்பார் நிறுவனமும், மேஜிக் ஃபேரம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ஆடியோவை இம்மாதம் 25 ஆம் தேதியும், படத்தை ஜூன் மாதம் 17ஆம் தேதியும் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்! ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் ஆடியோ வெளியீட்டு மற்றும் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் ஆடியோவை அடுத்த மாதம் (ஜூன்) 4-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். பட ரிலிஸ் எப்போது என்று அறிவிக்கவில்லை. இப்படத்தின் ஆடியோவை உரிமையை சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;