டார்லிங், காஞ்சனா 2 வரிசையில் டிமான்ட்டி காலனி காலனி!

டார்லிங், காஞ்சனா 2 வரிசையில் டிமான்ட்டி காலனி காலனி!

செய்திகள் 20-May-2015 11:46 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பேய் படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. கடந்த வருடம் யாமிருக்க பயமே, அரண்மனை, பிசாசு இந்த வருடம் டார்லிங், காஞ்சனா 2 போன்ற படங்கள் ‘பேய் வசூல்’ செய்து தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும், தியேட்டர் அதிபர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அதோடு ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுத்து வந்தனர்.

அந்த வரிசையில் இந்த வெள்ளிக்கிழமை (மே 22) அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிமான்ட்டி காலனி காலனி’ படம் ரிலீஸாகிறது. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அஜய் ஞானமுத்து இப்படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். அருள்நிதியின் ‘மோகனா மூவிஸ்’ தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

அடையாரில் உள்ள ஏரியா ஒன்றின் பெயரே டிமான்ட்டி காலனி காலனி. அங்கேயுள்ள பங்களா ஒன்றில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். வழக்கமாக பேய் என்றாலே பெண்ணாகத்தான் இருக்கும். ஆனால், இப்படத்தில் ஒரு ஆண் பேயாக வருகிறார். அதுவும் வெளிநாட்டுப் போயாம். இதனால் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவல் எழுந்திருக்கிறது. இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விரைவில் திருமணமாக உள்ள நடிகர் அருள்நிதிக்கு ‘டிமான்ட்டி காலனி காலனி’ படம் அவரது கேரியரில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புவோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;