‘மே’யில் ஜோதிகா, அக்டோபரில் ஐஸ்வர்யா ராய்!

‘மே’யில் ஜோதிகா, அக்டோபரில் ஐஸ்வர்யா ராய்!

செய்திகள் 20-May-2015 11:07 AM IST Chandru கருத்துக்கள்

மலையாளத்தில் மஞ்சு வாரியர், தமிழில் ஜோதிகாவைத் தொடர்ந்து ஹிந்தியில் ஐஸ்வர்யா ராயின் ‘கம்பேக்’ சீசன் இது. தமிழில் ‘எந்திரன்’, ஹிந்தியில் ‘குஸாரிஷ்’ படங்களுக்குப் பிறகு நடிப்பிற்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்திருந்தார் ஐஸ்வர்யா ராய். திருமணம், குழந்தைப்பேறு என குடும்பத்தலைவியாக மாறி தன் கடமைகளை முடித்துவிட்டு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சஞ்சய் குப்தா இயக்கத்தில் ‘ஜஸ்பா’ எனும் ஹிந்தி படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் இர்ஃபான் கான், ஷபானா ஆஸ்மி, அனுபம் கேர், ஜாக்கி ஷெராப், அதுல் குல்கர்னி, சன்னி தியோல் என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். இறுதிகட்ட வேலைகளில் இருக்கும் ‘ஜஸ்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்திருக்கிறது. அதில் படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. நீண்டநாட்கள் கழித்து ஐஸ்வர்யா ராயை மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்கும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் உலக அழகியின் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - அடி வாடி திமிரா பாடல்


;