சந்தானம் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

சந்தானம் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 20-May-2015 10:21 AM IST VRC கருத்துக்கள்

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இனிமே இப்படித்தான்’. தனது ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சந்தானமே தயாரித்துள்ள இப்படத்தை சந்தானத்திடம் உதவியாளர்களாக பணிபுரிந்த முருகன் மற்றும் ஆனந்த் இருவர் சேர்ந்து முருகானந்த் என்ற பெயரில் இயக்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் அனைத்தும் முடிந்த இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியானது, இதனை தொடர்ந்து இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு அனைவரும் ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். சந்தானத்துடன் அக்‌ஷனா சவேரி ஹீரோயினாக நடித்திருக்கும் இப்பட்ம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;