விரைவில் ஸ்ருதிஹாசனின் ‘கல்யாண சமையல் சாதம்’

விரைவில் ஸ்ருதிஹாசனின் ‘கல்யாண சமையல் சாதம்’

செய்திகள் 20-May-2015 10:07 AM IST Chandru கருத்துக்கள்

பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கிய ‘கல்யாண சமையல் சாதம்’ திரைப்படம் வசூல்ரீதியாக சாதிக்கவில்லையென்றாலும், விமர்சனரீதியாக பத்திரிகைகளிடம் பாராட்டுக்களை அள்ளியது. இப்படத்தின் கதைக்களம் தமிழைவிட ஹிந்திக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என படம் வெளிவந்தபோதே பேச்சு அடிபட்டது. தற்போது ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் களமிறங்கிவிட்டார்கள்.

ஹிந்தி ரீமேக்கை ‘ரான்ஜ்னா’ புகழ் ஆனந்த் எல்.ராய் தயாரிக்கிறார். தமிழில் இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னாவே ஹிந்தியிலும் இயக்குகிறார். பிரசன்னா நடித்த கேரக்டரில் இம்ரான் கானும், லேகா வாஷிங்டன் நடித்த கேரக்டரில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பைத் துவங்கி அடுத்த வருடத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;