ஜூன் 5ல் ரிலீஸாகும் தனுஷின் தேசிய விருதுப் படம்!

ஜூன் 5ல் ரிலீஸாகும் தனுஷின் தேசிய விருதுப் படம்!

செய்திகள் 18-May-2015 12:22 PM IST Chandru கருத்துக்கள்

நடிகராக ஒருபுறம் ஜெயித்துக்கொண்டே இன்னொருபுறம் தயாரிப்பாளராகவும் புதிய திறமையாளர்களை சினிமாவுக்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் தனுஷ். ‘3’ படத்தின் மூலம் தனது மனைவி ஐஸ்வர்யாவை இயக்குனராக்கிய தனுஷ், அதன்பிறகு சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். தற்போது வெற்றிமாறனுடன் இணைந்து தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’ படத்தைத் தயாரித்திருக்கிறார் தனுஷ். இப்படம் சர்வதேச அளவில் பல விருது விழாக்களில் கலந்துகொண்டதோடு, இந்தியாவின் உயர்ந்த திரைப்பட விருதான தேசிய விருதையும் வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

எம்.மணிகண்டன் இயக்கத்தில் விக்னேஷ், ரமேஷ் என்ற இரண்டு சிறுவர்கள் கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கான சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் என இரண்டு தேசிய விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. தேசிய விருது பெற்ற¬த் தொடர்ந்து இப்படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது ஜூன் 5ஆம் தேதி இப்படத்தை வெளியிட தேதி குறிக்கப்பட்டுள்ளது. விருதுப்படமாக இருந்தாலும், அனைவரும் ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக இப்படம் இருக்கும் என தனுஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;