துவங்கியது கமலின் ‘தூங்காவனம்’

துவங்கியது கமலின் ‘தூங்காவனம்’

செய்திகள் 18-May-2015 11:13 AM IST Chandru கருத்துக்கள்

‘உத்தமவில்லன்’ சமீபத்தில் வெளியாகி விமர்சனரீதியாக பெரிய பாராட்டுக்களைக் குவித்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து கமலின் அடுத்த படமான ‘பாபநாசம்’ ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சின்ன சின்ன வேலைகள் மீதமிருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படமும் பாபநாசத்தைத் தொடர்ந்து வெளியாகலாம். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து கமல் அடுத்து நடிக்கவிருக்கும் படம் ‘தூங்காவனம்’.

கடந்த சனிக்கிழமையன்று உலகநாயகனே வீடியோ மூலமாக இப்படம் குறித்த அறிவிப்பை உலகிற்கு பறைசாற்றியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், அட்வெஞ்சருக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவிருக்கும் த்ரில்லர் படம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 படங்களைத் தொடர்ந்து ‘தூங்காவன’த்திற்கும் ஜிப்ரானே இசையமைக்கிறார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு மொரீசியஸ் தீவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;