இன்றுமுதல் ஆந்திராவில் தெறிக்கும் ‘மாஸ்’

இன்றுமுதல் ஆந்திராவில் தெறிக்கும் ‘மாஸ்’

செய்திகள் 18-May-2015 10:38 AM IST Chandru கருத்துக்கள்

பெரிய எதிர்பார்ப்பில் இருந்துவரும் சூர்யாவின் ‘மாஸ்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உலகமெங்கும் ரிலீஸாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா என இரண்டு நாயகிகள் நடித்திருக்கிறார்கள். வித்தியாசமான வேடங்களில் பிரேம்ஜி அமரன், சமுத்திரக்கனி, பார்த்திபன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘மாஸ்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 18) அதன் தெலுங்கு டப்பிங்கான ‘ரக்ஷுடு’ படத்தின் பாடல்கள் ஆந்திராவில் வெளியாகவிருக்கின்றன. தமிழைப் போல தெலுங்கிலும் சூர்யாவிற்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;