முக்கிய மைல்கல்லை எட்டிய ‘கொம்பன்’

முக்கிய மைல்கல்லை எட்டிய ‘கொம்பன்’

செய்திகள் 18-May-2015 10:24 AM IST Chandru கருத்துக்கள்

பிரியாணி, மெட்ராஸ் என சிட்டி கேரக்டர்களில் நடித்து வெற்றிபெற்ற கார்த்தி, மீண்டும் ‘பருத்திவீரன்’ ஸ்டைலில் முழுநீள கிராமத்துப் படத்தில் நடித்த படம் ‘கொம்பன்’. ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடிக்க, அவரின் அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் ‘அடி கருப்புநிறத்தழகி...’ பாடல் இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்களின் வரிசையில் இடம்பிடித்தது.

ரிலீஸ் நேரத்தில் சிற்சில பிரச்சனைகள் முளைக்க, அதனைத் தகர்த்தெறிந்து ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது கொம்பன். நீண்டநாட்கள் கழித்து ஏ சென்டர் மட்டுமில்லாமல் பி,சி, டூரிங் டாக்கீஸ் என அனைத்து திரையரங்குகளிலும் இப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. படம் எடுத்தவர்கள், வாங்கியவர்கள், வெளியிட்டவர்கள் என அனைத்துதரப்பினருக்கும் இப்படம் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. தற்போது இப்படம் ரிலீஸாகி 50வது நாள் என்ற முக்கிய மைல்கல்லையும் எட்டியிருக்கிறது. ‘கொம்பனி’ன் ஆட்டம் இன்னும் தமிழகத்தின் ஒரு சில ஊர்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;