‘புலி’, ‘பாயும் புலி’ ரிலீஸ் ப்ளான்!

‘புலி’, ‘பாயும் புலி’ ரிலீஸ் ப்ளான்!

செய்திகள் 16-May-2015 2:53 PM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடிக்கும் ‘பாயும் புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘வேந்தர் மூவீஸ்’ தயாரிக்கும் இப்படத்தை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பும் முடிவுறும் கட்டத்தில் இருக்கிறது. இதனால் விஜய்யின் ‘புலி’ படத்தையும் வியாயக சதுர்த்தியன்று ரிலீஸ் செய்ய ப்ளான் பண்ணியிருக்கிறார்களாம. அதனால் ‘புலி’யும், ‘பாயும் புலி’யும் ஒரே நாளில் வெளியாகி மோத வேண்டாம் என்ற நல்ல எண்ணத்துடன் விஷாலின் ‘பாயும் புலி’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக தள்ளி வைத்திருக்கிறார்களாம். இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;