அஜித்தின் 57-ஆவது பட தயாரிப்பாளராகிறார் சக்ரவர்த்தி?

அஜித்தின் 57-ஆவது பட தயாரிப்பாளராகிறார் சக்ரவர்த்தி?

செய்திகள் 16-May-2015 2:43 PM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்திக்காக ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் அஜித். தற்போது சிவா இயக்கி வரும் படம் அஜித் நடிக்கும் 56ஆவது படம். அஜித்தின் 57-ஆவது படமாக அமையவிருக்கும் படத்தை அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவரத்தன் இயக்க உள்ளாராம். அஜித் நடிப்பில் ‘ராசி’, ‘வாலி’, ‘முகவரி’, ‘சிட்டிசன்’, ‘வரலாறு’ என ஒன்பது படங்களை தயாரித்துள்ளார் சக்ரவர்த்தி. அன்றைய காலகட்டத்தில் அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தவர் சக்ரவர்த்தி. சமீபத்தில் இவர் தயாரித்த சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை. சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள ‘வாலு’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்! பல தேதிகள் அறிவிக்கப்படும் இன்னும் வெளியாகாத ‘வாலு’ திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித், விஷ்ணுவர்தன், சக்ரவர்த்தி இணையும் படம் குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;