வசந்த் இயக்கத்தில் பார்வதி!

வசந்த் இயக்கத்தில் பார்வதி!

செய்திகள் 16-May-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘பூ’, ‘மரியான்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் நடித்த பார்வதி அடுத்து வசந்த் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதிய ஒரு கதையை தான் வசந்த் படமாக்குகிறாராம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள கதையாம் இது. அதனால் இந்த கதைக்கு பார்வதி மெத்த பொத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைக்க முடுவு செய்துள்ளார் வசந்த். பார்வதியும், நடிக்க ஸ்கோப் உள்ள பார்த்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே பிரபல எழுத்தாளர் அசோக் மித்ரன் எழுதிய ஒரு கதையை ‘தண்ணீர்’ என்ற பெயரில் வசந்த் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, அந்த படம் சம்பந்தமாக சென்னையில் விழா எல்லாம் நடைபெற்றது. வசந்த் இயக்கத்தில் பார்வதி நடிக்கவிருக்கும் படம் அதுதானா என்பது தெரியவில்லை. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி டீசர் 2


;