ஜெயா டிவியில் வடிவேலுவின் எலி?

ஜெயா டிவியில் வடிவேலுவின் எலி?

செய்திகள் 16-May-2015 10:48 AM IST Chandru கருத்துக்கள்

‘தெனாலிராமன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடித்திருக்கும் படம் ‘எலி’. இப்படத்தையும் ‘தெனாலிராமன்’ யுவராஜ் தயாளனே இயக்கியிருக்கிறார். வடிவேலுவுக்கு ஜோடியாக இப்படத்தில் ‘அந்நியன்’ சதா நடித்திருக்கிறார். கொள்ளைக்கூட்டம் ஒன்றில் கொள்ளையனாகப் புகுந்து வேவு பார்க்கும் வேலையே வடிவேலுக்கு ‘எலி’ படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ‘எலி’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு பத்திரிகையாளர்களிடம் பரவலாக பாராட்டுக்களை அள்ளியது.

இப்படத்தின் சேனல் உரிமையை ஜெயா டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு படத்தை வரும் 29ஆம் தேதி வெளியிடவும் திட்டமிடப்பட்டு வருகிறதாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;