சிம்பு, செல்வராகவன் பட ஷூட்டிங் துவங்கியது!

சிம்பு, செல்வராகவன் பட ஷூட்டிங் துவங்கியது!

செய்திகள் 14-May-2015 1:40 PM IST VRC கருத்துக்கள்

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் செல்வராகவன். நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணியான செல்வராகவன் , எஸ்.டி.ஆர். (சிம்பு) இருவரும் இனைந்து அதிரடியான பொழுதுபோக்குத் திரைப்படத்தை வழங்குகின்றனர். ‘ Glo studios’ என்ற நிறுவனம் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் இருவரும் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இருவரும் வகுப்பறைத் தோழர்கள் என்பது கூடுதல் தகவல்.இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தில் எஸ்.டி.ஆருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, டாப்ஸி பன்னு இருவரும் நடிக்கின்றனர்.

தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெகதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க, முன்னாள் கதாநாயகனான சுரேஷ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை படங்களின் வெற்றிக் கூட்டணியாக இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

அரவிந்த் கிருஷ்ணா ஓளிப்பதிவு செய்கிறார். “மதராசப்பட்டினம்’ படம் புகழ் செல்வகுமார் இப்படத்தில் கலை இயக்குனராகிறார். இப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைரா டீஸர்


;