பெண்களுக்கு உதவும் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம்!

பெண்களுக்கு உதவும் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம்!

கட்டுரை 14-May-2015 11:47 AM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தரமான திரைப்படங்களை தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்நிறுவனம் முதன் முதலாக தயாரித்துள்ள ‘36 வயதினிலே’ திரைபடம் நாளை (15-5-15) வெளியாகிறது. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில், ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இப்படம் மக்களுக்கு நல்ல ஒரு சமூக கருத்தை சொல்வதோடு, பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படமாகவும் அமைந்துள்ளது.
அம்மாவாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, தோழியாக அனைவரின் வாழ்வையும் உயர்த்துகிறார்கள் பெண்கள். அவர்களின் கனவுகளை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் நிறைவேற்றும் நோக்கத்தில் 2டி நிறுவனமும், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து ஒரு புது முயற்சி மேற்கொள்கின்றன.

‘இவள் திறமைக்கு வாழ்வில் மிகப் பெரிய உயர்த்தை தொடுவாள்’ என்று நீங்கள் ஆச்சர்யப்பட்ட பெண், திருமண வாழ்விற்கு பிறகு இப்போது எப்படி இருக்கிறார் என்பதை கவனியுங்கள். தன் கனவுகளை, திறமைகளை மறந்து, வாழ்வை சின்ன வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டதாக தோன்றினால் அவர்களைப் பற்றி கீழ்காணும் முகவரிக்கு எழுதுங்கள்! உங்களின் அக்கறை, சிலரின் கனவுகளை மீட்டு எடுக்க துணை நிற்கும். உங்கள் முயற்சி மற்றவர்களுக்கு விழிப்புணர்வாகவும், ஊக்கமாகவும் அமையும்.

விதிமுறைகள்:

நீங்கள் பரிந்துரைக்கும் பெண், திருமணமானவராக இருக்க வேண்டும். அவரின் திறமை பற்றியும், இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பதை பற்றியும் விளக்கமாக இரண்டு பக்கத்திற்குள் எழுதவும்.

தேர்ந்தெடுக்கப்படும் பெண்களின் உண்மைத் தகவல்கள் உறுதி செய்யப்படும். பெண்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் இந்த முயற்சியில் நடுவர்களின் முடிவே இறுதியானது.
கடிதங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 20-5-15.

முகவரி:
அகரம் ஃபவுண்டேஷன்,
29, கிருஷ்ணா தெரு,
தி.நகர், சென்னை-600017.
Email : 36vdreams@agaram.in

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;