‘எலி’ எங்கு தாவும் என்று சொல்ல முடியாது! - வடிவேலு

‘எலி’ எங்கு தாவும் என்று சொல்ல முடியாது! - வடிவேலு

செய்திகள் 14-May-2015 11:07 AM IST VRC கருத்துக்கள்

வடிவேலு, சதா ஜோடியாக நடித்துள்ள ‘எலி’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. வடிவேலு நடித்த ‘தெனாலி ராமன்’ படத்தை தொடர்ந்து யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள ‘எலி’ படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில் வடிவேலு பேசும்போது,

‘‘சமீபகாலமாக நான் எங்கு சென்றாலும் நீங்கள் ஏன் தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை என்று என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டாத குறையா கேட்கிறார்கள்! ‘எலி’ மாதிரி ஒரு படத்தில் நடித்துவிட்டு தொடர்ந்து நடிக்கலாம என்று தான் இருந்தேன். அப்போது தான் யுவராஜ் தயாளன் இந்த ’எலி’ கதையைச் சொன்னார். கதையை கேட்ட்தும் ஆஹா, இது எனக்கு சரியான கதை என்று நடிக்க ஒப்புக்கொண்டேன். குழந்தைகளுடன் குடும்பமாக வந்து பார்க்க கூடிய படமாக ‘எலி’ அமைந்திருக்கிறது. எலியோட குணம் என்னவோ அது மாதிரி ஒரு கேர்க்டரில் இப்படத்தில் நடித்துள்ளேன்.

கதாநாயகி சதா மீது ஒரு தலை காதல் கொள்கிற மாதிரியான கேரக்டர். நான் கதாநாயகிகளுடன் அப்படிதானே நடிக்க முடியும்! இதில் ‘ஆராதனா’ என்ற ஹிந்தி படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற ஒரு பாடலுக்கு அந்த காலத்து கெட்-அப்பில் நடனம் ஆடியிருக்கிறேன். யாரோ ஒருவர் கேட்டார், ‘எலி’யும், ‘புலி’யும் ஒரே நேரத்தில் மோதுமா என்று?

தேவையில்லாமல் முடிச்சு போட்டு பிரச்சனை உண்டாக்க பார்க்கிறார்கள்!
கதாநாயகர்களெல்லாம் சிக்ஸ் பேக் வைத்து நடிக்கிறார்கள்! ஆனா எனக்கு ‘ஒரு பேக்’ தான் இருக்கிறது. நான் அர்னால்டு அல்ல. எனக்கு என்ன வருமோ அதைத்தான் செய்ய முடியும். யாருக்கும் நான் போட்டி அல்ல! ‘எலி’ வெளியாகட்டும்! அதன் பாய்ச்சல் எப்படி என்று பார்த்து இனி மற்ற ஹீரோக்கள் படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா என்றும் கேட்டார்கள்! எதையும் நாம் உறுதியாக சொல்ல முடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்! ‘எலி’ எங்கே தாவும் என்று யாருக்கும் தெரியாது. அதுபோல தான் நானும்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டியூப்லைட் - டிரைலர்


;