ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

செய்திகள் 13-May-2015 3:28 PM IST Chandru கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்திருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. யுடிவி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்காக தமிழகத்தில் மட்டும் 300க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். இப்படம் வெளியாகும் இதே நாளில் யுடிவி தயாரிக்கும் இன்னொரு படமான ‘யட்சன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவருகிறது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவரது தம்பி கிருஷ்ணாவும், ஆர்யாவும் இணைந்து இப்படத்தில் நாயகர்களாக நடிக்கிறார்கள். ‘எனக்குள் ஒருவன்’ தீபா சன்னதியும், சுவாதி ரெட்டியும் நாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

ஒரே நாளில் ‘புறம்போக்கு’ படமும், ‘யட்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளிவருவதால் ஆர்யா ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;