‘திருட்டுக்கல்யாண’த்துக்காக சிம்பு, ஆன்ட்ரியா பாட்டு!

‘திருட்டுக்கல்யாண’த்துக்காக சிம்பு,  ஆன்ட்ரியா பாட்டு!

செய்திகள் 13-May-2015 12:49 PM IST VRC கருத்துக்கள்

‘ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘திருட்டுக்கல்யாணம்’. இப்படத்தில் கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக தேஜஸ்வீ நடித்துள்ளார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், பசங்க செந்தி, தம்பிராமையா, தேவதர்ஷினி, இயக்குனர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஷக்தி வேலன். இவர் இயக்குனர்கள் பாக்யராஜ், சசி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். படம் குறித்து ஷக்திவேலன் கூறும்போது,

‘‘இந்த படத்தில் வரும் ‘ஆச மேல ஆச’ என்ற பாடலை சிலம்பரசனும், ‘சொர்க்கத்த’ என்று துவங்கும் பாடலை ஆன்ட்ரியாவும் பாடியுள்ளார்.

கல்லூரியில் படிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப் போய் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை அனுபவித்தார்களா இல்லையா? என்பதே இப்படத்தின் கதை! இப்படத்திற்கு வைத்தி இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலுவிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் நல்ல முத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;