‘நண்பர்கள் நற்பணி மன்ற’த்தில் எஸ்.ஜே.சூர்யா, பேரரசு!

‘நண்பர்கள் நற்பணி மன்ற’த்தில் எஸ்.ஜே.சூர்யா, பேரரசு!

செய்திகள் 13-May-2015 12:30 PM IST Top 10 கருத்துக்கள்

‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் நடிகர் பிரசாந்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ராதா பாராதி. 1990-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படத்தை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் ராதா பாரதி! அவர் இப்போது இயக்கியுள்ள படம் ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’. அறிமுக நடிகர் செங்குட்டுவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ‘ஆடுகளம்’ நரேன், சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீஅண்ணாமலை மூவீஸ் நிறுவனம் சார்பில் சி.மாதையன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. டிரைலரை இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வெளியிட இயக்குனர் பேரரசு பெற்றுக்கொண்டார். இப்படம் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகி இருக்கிறதாம். வருகிற 22-ஆம் தேதி இப்பட்ம் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இளமி - டிரைலர்


;