‘மாஸ்’ குழந்தைகளுக்கும் பிடிக்கும்! -சூர்யா

‘மாஸ்’ குழந்தைகளுக்கும் பிடிக்கும்! -சூர்யா

கட்டுரை 13-May-2015 11:45 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘மாஸ்’ திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் ரிலீசாகவிருக்கிறது. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுடன் நயன்தார, ப்ரணிதா, மனோபாலா, பார்த்திபன், சமுத்திரகனி, பிரேம்ஜி அமரன், கருணாஸ், ஸ்ரீமன் முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜீவன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு ‘மாஸ்’ குறித்து பேசும்போது.

‘’இதுவரை கதையே இல்லாமல் படங்கள் பண்ணினேன். ஆனால் இந்த படத்தில் சூர்யாவுக்காக புதுசாக ஒரு கதையை பண்ணியிருக்கிறேன். எந்த படத்திற்கும் நான் பெரிசாக மெனக்கெட்டதில்லை. ஆனால் இப்படத்திற்காக நான் நிறைய சிரமப்பட்டுள்ளேன். இப்படத்தில் ஒளிப்பதிவுக்கு ஆர்.டி.ராஜசேகர், கலைக்கு ராஜீவன் என புதியவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளேன். ‘பிரியாணி’ படம் பண்ணிகிட்டிருந்த நேரத்தில் தான் இந்த படத்தின் ஒன் லைனை ஞானவேல் ராஜாவிடம் சொன்னேன். அவர் அதை அப்படியே சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார். சூர்யா உடனே என்னை கூப்பிட்டு, ‘நீங்க சொன்ன அந்த ஒரு சீகுவன்ஸ் நல்லா இருக்கு’ இதை நாம் பண்ணலாம் என்றார். அப்படி துவங்கிய படம் தான் ‘மாஸ்’. ஆனால் அன்றைக்கு நான் சொன்ன அந்த சிகுவன்ஸ் இப்போது ‘மாஸ்’ படத்தில் இல்லை. இப்போது படம் வேறு ஒரு களத்தில் உருவாகியிருக்கிறது.

எப்போதுமே சூர்யாவிடம் கதை சொல்லும்போது ஒரு பதட்டம் இருக்கும். அவர் நாம் எதிர்பாரக்காத இடத்தில் ஒரு கேள்வி கேட்பார். அவ்வளவு ஷார்ப் அவர். ஒவ்வொரு சீனும் நல்லா வரணும்னு அப்படி மெனக்கெடுவார் சூர்யா. வித்தியாசமாக சிந்திப்பார். இந்த படத்தில் காதில் ஒரு பின் போட்ட மாதிரி அவர் வருவார்! இந்த கான்சப்ட் கூட சூர்யாவுடையது தான்! எல்லோரும் ‘மாஸ்’ என்றால் என்ன என்று கேட்டார்கள். படத்தில் சூர்யா கேரக்டர் பெயர் மாசிலாமணி! அதை வைத்து தான் படத்திற்கு ‘மாஸ்’ என்று வைத்திருக்கிறோம்! வழக்கமாக என் படங்களில் புகை பிடிப்பது மாதிரி, சரக்கு அடிப்பது மாதிரி காட்சிகள் இருக்கும்! ஆனால் இப்படத்தில் ஒரு ஸ்மோக்கிங் காட்சி கூட கிடையாது! ஐட்டம் சாங், பெண்களை கேலி, கிண்டல் செய்யும் காட்சிகளும் கிடையாது. இப்படத்தை குழந்தைகளையும் மனதில் கொண்டு இயக்கியுள்ளேன். குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான படமாக ‘மாஸ்’ இருக்கும்’’ என்றார்.

சூர்யா பேசும்போது, ‘‘நான் வெங்கட் பிரபுவுடன் படம் பண்றேன் என்று தகவல் வெளியானதும் எல்லாரும் என்கிட்ட, ‘‘வெங்கட் பிரபுவுடனா படம் பண்றீங்க? செட் ஆகுமா? எப்படி?’’ என்று தான் கேட்டார்கள்! அது மாதிரி வெங்கட் பிரபுவிடமும் நிறையெ பேர் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் வெங்கட் பிரபு இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை, களத்தை கையில் எடுத்திருக்கிறார். வரிசையாக பேய் படங்கள் வருகிற சமயத்தில் நீங்களும் பேய் படத்தில் நடிக்கிறீங்களா என்றும் கேட்டார்கள். இதை முழுக்க முழுக்க பேய் படம் என்றோ, ஹாரர் படம் என்றோ சொல்ல முடியாது! ஒரு சில காட்சிகள் மட்டும் தான் அப்படி இருக்கும்! சின்ன வயதில் நாம் பார்த்த சில விஷயங்கள் இப்படத்தில் இருக்கும்! இப்படத்தில் என்னை வேறு ஒரு டைமன்ஷல் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. இப்படம் குழந்தைகளுக்கும் பிடிக்கிற மாதிரியான படமாக இருக்கும். பெரியவர்களுக்கும் பிடிக்கிற மாதிரியான படமாக இருக்கும். மொத்தத்தில் இந்த சம்மர் ஹாலிடேக்கு ஏற்ற படமாக ‘மாஸ்’ இருக்கும்’’ என்றார் சூர்யா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;