கௌதம், சிம்பு படத்தின் புதிய நாயகி!

கௌதம், சிம்பு படத்தின் புதிய நாயகி!

செய்திகள் 13-May-2015 10:15 AM IST VRC கருத்துக்கள்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனனும், சிம்புவும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘அச்சம் என்பது மடைமையடா’. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பல்லவி சுபாஷ் ஒப்பந்தமாகி, சில நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. இந்த சமயத்தில் தான் கௌதம் மேனனுக்கு அஜித் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து, ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கினார். இதனால் சிம்பு படத்தின் படப்பிடிப்பு அப்போது நிறுத்தி வைக்கப்பட்டது. அஜித் படம் வெளியானதை தொடர்ந்து இப்போது மீண்டும் ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து பல்லவி சுபாஷ் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கௌதம் மேனன் வேறு கதாநாயகியை தேடிவந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சிமா மோகனை இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக்க முடிவு செய்துள்ளார். மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்கவர் தான் மஞ்சிமா மோகன். இவர் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;