‘புலி’ ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் எப்போது?

‘புலி’ ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் எப்போது?

செய்திகள் 12-May-2015 3:38 PM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படக்குழு தற்போது பல்கேரியாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இப்படத்தின் டைட்டிலை அறிவித்ததோடு சரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் ஆகியவை எப்போது வெளிவரும் என்பதும், படம் எப்போது ரிலீஸாகும் என்பதும் இதுவரை சஸ்பென்ஸாகவோ இருந்து வருகிறது.. தற்போது அந்த சஸ்பென்ஸை உடைக்கும் வகையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று படக்குழுவுக்கு நெருக்கமானவரிடமிருந்து நமக்குக் கிடைத்திருக்கிறது.

‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த மாத இறுதியில் வெளிவரும் என்றும், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோல் படத்தை விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். இப்படத்தில் கிராபிக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படும் என்பதால்தான், ரிலீஸை செப்டம்பரில் திட்டமிட்டிருக்கிறதாம் ‘புலி’ படக்குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;