வசனகர்த்தாவாகிறார் கபிலன் வைரமுத்து!

வசனகர்த்தாவாகிறார் கபிலன் வைரமுத்து!

செய்திகள் 12-May-2015 12:34 PM IST VRC கருத்துக்கள்

கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் படம் ‘மீன்’.. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசைய அமைக்கிறார். படத்தின் வசனத்தையும், பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதுகிறார். புதுவிதமான ‘ஃபர்ஸ்ட் லுக்’கோடு இம்மாத இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் வெளியான கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி நாவலைப் படித்திருக்கிறார் இயக்குநர் ஹரிபாஸ்கர். அது பிடித்துப்போகவே கபிலன் வைரமுத்துவை வசனம் எழுதக் கேட்டிருக்கிறார். கதை தொடர்பான விவாதத்திற்கு பின் கபிலன் வைரமுத்து ஒப்புக்கொண்டார். ‘உதயம் NH4’ முதல் ‘அநேகன்’ படத்தின் தலைப்புப் பாடல் வரை பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதிய கபிலன் வைரமுத்து தற்போது ‘பேய்கள் ஜாக்கிரதை’, ‘களம்’, ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் மகன் இயக்குநர் கலாபிரபு இயக்கி கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘இந்திரஜித்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாயும் புலி - சிலுக்கு மரமே பாடல் வீடியோ


;