‘டிமான்டி காலனி’யில் 3 இசை அமைப்பாளர்கள்!

‘டிமான்டி காலனி’யில் 3 இசை அமைப்பாளர்கள்!

செய்திகள் 12-May-2015 12:23 PM IST VRC கருத்துக்கள்

அருள்நிதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பேய் படம் ‘டிமான்டி காலனி’. ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் மற்றும் மோகனா மூவீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் கேபா ஜெரமியா. இந்த படத்திற்காக இசை அமைப்பாளர்கள் டி.இமான், அனிருத் ஆகியோரை பாட வைத்திருக்கிறார் கேபா ஜெரமியா. தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமார் எழுதியுள்ள பாடலை அனிருத்தும், அருண்ராஜா காமராஜ் இழுதியுள்ள பாடலை டி.இமானும் பாடியுள்ளார். அறிமுக இசை அமைப்பாளருடன் பிரபல இசை அமைப்பாளர்கள் இருவர் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் இசை மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;