சிரஞ்சீவியின் 150வது படத்தில் நயன்தாரா!

சிரஞ்சீவியின் 150வது படத்தில் நயன்தாரா!

செய்திகள் 12-May-2015 10:35 AM IST Chandru கருத்துக்கள்

2007ல் வெளிவந்த ‘ஷங்கர் தாதா ஜிந்தாபாத்’ படத்திற்குப் பிறகு அரசியலில் பிஸியாகிவிட்டதால் படங்களில் நடிப்பதை நிறுத்தினார் சிரஞ்சீவி. அதன் பிறகு ஒன்றிரண்டு படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக சிரஞ்சீவி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் சிரஞ்சீவி. அதுவும் அது அவரின் 150வது படம் என்பதால் தெலுங்குத் திரையுலகமே பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது. இப்படத்தை இயக்கப்போவது யார் என கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பெரிய பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. சிரஞ்சீவின் 150வது படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் தற்போது பூரி ஜெகன்நாத்திற்கு அடித்திருக்கிறது.

‘டெம்ப்பர்’ படத்திற்குப் பிறகு மகேஷ்பாபுவை பூரி ஜெகன்நாத் இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, திடீர் திருப்பமாக சிரஞ்சீவியை இயக்குகிறார் பூரி என்ற செய்தி ஆந்திராவில் சந்தோஷ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக கருத்துக்கள் நிறைந்த கமர்ஷியல் படமாக இதை உருவாக்கவிருக்கிறார்களாம். சிரஞ்சீவிக்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னொரு நாயகியாக அஞ்சலியும் நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - டிரைலர்


;