‘புறம்போக்கு’ படத்தில் கார்த்திகாவின் முதல் மரியாதை!

‘புறம்போக்கு’ படத்தில் கார்த்திகாவின் முதல் மரியாதை!

செய்திகள் 12-May-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் வருகிற 15-ஆம் தேதி ரிலீசாகிறது. ஆர்யா, ஷாம், விஜய்சேதுபதி முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் ‘குயிலி’ எனும் புரட்சிப் பெண்ணாக கார்த்திகா நாயர் நடித்திருக்கிறார். புரட்சிப் பெண் வேலு நாச்சியார் படையில் இருந்தவர் குயிலி. இந்தியாவின் முதல் தற்கொலை படைப் பெண் குயிலி தானாம்! இந்த கேரக்டரை நினைவு கூறும் வகையில் தான் எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தில் கார்த்திகாவின் கேரக்டரை உருவாக்கியிருக்கிறார். கார்த்திகா, ‘குயிலி’ கேரக்டரில் நடித்தது பெருமையாக இருக்கிறது’ என்று கூறியதோடு இந்த கேரக்டர் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு கேரக்டராக அமைந்துள்ளது. அதற்கு இன்னொரு காரணம் என் அம்மா (ராதா) நடித்த படங்களில் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஒரு படம் ‘முதல் மரியாதை’. இப்படத்தில் என் அம்மாவும் ஒரு புரட்சிப் பெண்ணைப் போன்று, குயிலி என்ற கேரக்டரில் தான் நடித்திருந்தார். ‘முதல் மரியாதை’ படம் சூப்பர் ஹிட்டானதைப் போல இப்படமும் பெரிய வெற்றியை பெறும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;