சிம்புவுடன் இணையும் ‘மெட்ராஸ்’ நாயகி!

சிம்புவுடன் இணையும் ‘மெட்ராஸ்’ நாயகி!

செய்திகள் 12-May-2015 9:59 AM IST Chandru கருத்துக்கள்

‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளிவிட்டு சிம்புவை இயக்குகிறார் செல்வராகவன். இப்படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் த்ரிஷா. ஆனால், சில காரணங்களால் படத்திலிருந்து த்ரிஷா தற்போது வெளியேறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகியின் வேட்டை நடைபெற்று வந்தது. அந்த அதிர்ஷ்டம் தற்போது ‘மெட்ராஸ்’ நாயகி கேத்ரின் தெரஸாவுக்கு அடித்திருக்கிறதாம்.

ஆம்... கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிஷனில் கலந்து கொண்ட கேத்ரின் தெரஸா செல்வாவை இம்ப்ரஸ் செய்ய, அவரை தற்போது படத்தின் நாயகியாக்கிவிட்டார்கள். வரும் வியாழன் முதல் சிம்பு, கேத்ரின் தெரஸா கலந்துகொள்ளும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;