ஆவியுலக நற்பணி மன்ற தலைவர் லாரன்ஸ்!

ஆவியுலக நற்பணி மன்ற தலைவர் லாரன்ஸ்!

செய்திகள் 11-May-2015 2:38 PM IST VRC கருத்துக்கள்

உதயா நடித்துள்ள ‘ஆவிக்குமார்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஹாரர் பட வரிசையில் விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ‘ஆக்‌ஷன் டேக் மூவீஸ்’ பட நிறுவனம் சார்பில் ஸ்ரீதர் நாராயணன், எஸ்.சிவசரவணன் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் காண்டீபன் இயக்கியிருக்கிறார். விஜய் ஆன்டனி, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளனர். இவ்விழாவில் கலந்துகொண்ட நடிகர் விவேக் பேசும்போது,

‘‘நான் வேறு ஒரு படத்தின் ஷுட்டிங்கில் இருந்தேன். என்னுடைய நண்பன் உதயா என்பதால் தான் இந்த விழாவுக்கு வந்தேன். இந்த படமும் பேய் படம் என்று சொன்னார்கள். ‘ஆவி குமார்’ என்ற பெயரை வைத்தே அதை தீர்மானித்து விடலாம்! அதென்னவோ தெரியல, இப்போது எல்லா படங்களிலும் பேயையும், ஆவியையும் பெண்ணாகதான் காட்டுகி
றார்கள். ஒருவேளை எல்லா டைரக்டர்களும் கல்யாணம் ஆனவர்களா இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு படத்திலாவது ஒரு ஆம்பளையை பேயாக காட்டுங்களேன்’’ என்று தனது பாணியில் தமாஷாக பேசியதும் அரங்கத்தில் ஒரே சிரிப்பு!

பிறகு சீரியஸான மேட்டருக்கு வந்து விவேக் பேசும்போது, ‘‘சின்ன படங்களுக்கெல்லாம் இப்போது தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் பதினொரு மணி காட்சியாக குடும்ப படத்தை போடறாங்க. அந்த நேரத்தில் பெண்களெல்லாம் சமையல் வேலைகளை கவனித்து கொண்டிருப்பார்கள். தியேட்டருக்கு பெண்கள் வரவில்லை என்றால் எப்படி குடும்ப படங்கள் ஓடும்? நன்றாக ஓட வேண்டிய படத்தை கூட, பெரிய படங்களுக்காக சீக்கிரம் தியேட்டரிலிருந்து எடுத்து விடுகிறார்கள். சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கிறவர்களும் மனிதர்கள் தானே? அவர்கள் போடுறதும் பணம்தானே? உடனடியாக தயாரிப்பாளர் சங்கம் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கணும்’’ என்றார்.

அதற்கு பிறகு பேச வந்த தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் விவேக் பேசிய கருத்துக்களுக்கு சில விளக்கங்களை கொடுத்தார். விவேக் சொன்ன ஒரு விஷயம் தப்பு. ஆவியுலக நற்பணி மன்றத்தின் தலைவரே நம்ம லாரன்ஸ்தான். அவர் ஆரம்பித்து வைத்த ஆவிப்பட ட்ரென்டுதான் இன்னமும் ஓடிகிட்டு இருக்கு. அதே மாதிரி விவேக் சொன்ன சின்னப்பட தயாரிப்பாளர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. இப்போது அதை நோக்கிதான் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது’’ என்றார்.

‘ஆவி குமார்’ படத்தில் உதயாவுக்கு ஜோடியாக கனிகா திவாரி நடித்துள்ளார். இவர் ‘அக்னிபாத்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தவர். இவர்களுடன் நாசர், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெகன், முனீஸ் காந்த், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய படங்கள்

;