ஜூன் 12-லிருந்து படங்கள் ரிலீசாகுமா?

ஜூன் 12-லிருந்து படங்கள் ரிலீசாகுமா?

செய்திகள் 11-May-2015 12:57 PM IST VRC கருத்துக்கள்

திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் QUBE மற்றும் UFO நிறுவனங்களின் கட்டன உயர்வை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போரட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீருமானங்கள் வருமாறு:

1.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து கியூப், யூ.எஃப்.ஓ. போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் முறைகேடாக கட்டணத்தை வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

2.திரையரங்குகளில் விளம்பரங்கள் மூலம் வரும் சுமார் 400 கோடி ரூபாயில் தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்’

3.இதுநாள் வரை திரைப்படங்கள் திரையிட்ட வகையில் தயாரிப்பாளர்களுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

4.தயாரிப்பாளர்கள் அனுமதியுடன் மட்டுமே டிரைலர்கள் திரையிட வேண்டும். அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.

5.வசூல் செய்த சேவை வரியினை அரசிற்கு கட்டியதற்கான ஆதாரத்தை உடனே வழங்கவேண்டும்.

6.தயாரிப்பாளர்களின் திரைப்படத்திற்காக தான் விளம்பர்ம். எனவே அந்த திரைப்படத்தின் நடுவில் காட்டப்படும் விளம்பரம் மூலம் வசூலிக்கும் தொகையில் ஒரு பங்கினை தயாரிப்பாளருக்கு அளித்திட வேண்டும்.

7.குறைந்த பட்ச குறிப்பிட்ட காட்சிகளை திரையிட வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும்.

8.தமிழ் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்யும்போது அந்த ஒப்பந்தமானது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எளிமையான தமிழில் போடப்பட்ட ஒப்பந்தமாக இருக்க வேண்டும்.

9.முன்பணம் (Deposit) வாங்குவதை நிறுத்த வேண்டும்.

10. மே 29-ஆம் தேதிக்குள் (29-5-15) மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற ஜூன் 12-ஆம் தேதி முதல் எந்த திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்று கூட்டமைப்பின் சார்பாக தீர்மானிக்கப்பட்டது.

11.தனியார் கேபிள் டி.வி.களை தமிழக அரரே ஏற்று நடத்தியது போல் க்யூப், யூ.எஃப்.ஓ.போன்ற திரையுலக விரோத நிறுவனங்களை தாய் உள்ளத்தோடு, தமிழக அரசை வழிநடத்தும் மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் ஆசியோடு தமிழக அரசே ஏற்று நடத்தி, தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும் என்று பணிவுடன் கேட்டுகொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;