சந்தானம் பட விழாவில் சிம்பு பரபரப்பு பேச்சு!

சந்தானம் பட விழாவில் சிம்பு பரபரப்பு பேச்சு!

செய்திகள் 11-May-2015 12:12 PM IST VRC கருத்துக்கள்

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘இனிமே இப்படித்தான்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், எம்.ராஜேஷ், நடிகர்கள் ஆர்யா, சிம்பு, சந்தானம், தம்பி ராமையா, நரேன், உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஒரு இடைவேளைக்குப் பிறகு இவ்விழாவில் கலந்துகொண்டு சிம்பு பேசும்போது,

‘‘கடந்த இரண்டரை வருடங்களாக நான் நடித்த எந்தப் படமும் வெளியாகவில்லை. அதனால் சமீபகாலமாக நான் எந்த சினிமா விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை. நான் கடைசியாக கலந்துகொண்ட விழா இதே சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட ஆடியோ வெளியீட்டு விழா தான்! அதற்குப் பிறகு இப்போது தான் அதே சந்தானம் நடிக்கும் ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். இதற்கு காரணம் ‘மன்மதன்’ படத்தின் மூலம் நான் தான் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தினேன்.
‘மனமதன்’ படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்கும்போது நிறைய பேர் வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் இந்த பையனிடம் நல்ல திறமை இருக்கிறது என்று எல்லாரிடமும் கன்வின்ஸ் செய்து தான் அப்படத்தில் சந்தானத்தை நடிக்க வைத்தேன். இப்போது சந்தானம வளர்ந்து விட்டார். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த உலகத்தில் தட்டிவிட நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் தட்டிக் கொடுக்க தான் ஆளில்லை. கடந்த இரண்டரை வருடங்களாக நான் நடித்த எந்தப் படமும் வெளியாகாததால் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அதனால் கடவுளைத் தேடி போனேன். அதையும் சிலர் தவறாக எழுதினார்கள். நான் கடவுளைத் தானே தேடி போனேன், ஃபிகரை தேடி போகலையே!
நான் Born with silver spoon ஆக பிறந்தேன். அதனால் கஷ்டம் என்னவென்று தெரியாமல் தான் வளர்ந்தேன். ஆனால் கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு சாதாரண மனுஷனா எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன். எப்போதும் நான் நடித்து சம்பாத்திக்கிற பணத்தை என் அம்மாவிடம் தான் கொடுப்பேன். ஆனால் வருமானம் இல்லாத நேரத்தில் அவரிடம் பணம் கேடக, கஷ்டமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் எனக்கு ஒரு நடிகையுடன் காதலும் வந்தது. ஆனால் அவரும் என் கஷ்டத்தை பார்த்து விலகிச் சென்று விட்டார். இப்படி எல்லாமே போய், என்னிடம் உயிர் மட்டும் தான் இருந்தது. அப்போது தான் கௌதம் மேனன் ஒரு படத்தில் நடிக்க கூப்பிட்டார். அந்த பட்த்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு ‘தல’ அஜித் படம் வந்தது. அப்போது கௌதம் மேனன் இருந்த சூழ்நிலையில் அஜித் படம் இயக்குவதையே அவர் பெரிதாக நினைத்தார். நானும் விட்டுக் கொடுத்தேன். ஆனால் இந்த விஷயத்தில் என் அப்பா தான் ரொம்பவும் ஃபீல் பண்ணினார். இந்த சமயத்தில் தான் நான் இதுவரை எனக்காக தான் வாழ்ந்தேன் என்பதை உணர்ந்தேன்! அப்பதான் இனி நமக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காக வாழணும் என்று முடிவு செய்தேன். இனி என் வாழ்க்கை எனக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காகவும் இருக்கும்’’ என்று சிம்பு உருக்கமாக பேசினான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;