ஸ்டுடியோ கிரீனிடம் ஜி.வி.பிரகாஷ் குமார் படம்!

ஸ்டுடியோ கிரீனிடம் ஜி.வி.பிரகாஷ் குமார் படம்!

செய்திகள் 11-May-2015 11:16 AM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி, சிம்ரன் முதலானோர் நடித்து வரும் படம் ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசை அமைக்கிறார். ‘கேமியோ ஃபிலிம்ஸ் இந்தியா’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘டார்லிங்’. இந்தப் படத்தின் தயாரிப்பிலும் வெளியீட்டிலும் பெரும் பங்கு வகித்த ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தற்போது ஜி.வி.பிரகாஷின் ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தை உலகம் முழுக்க வெளியிடும் உரிமையை கைபற்றியுள்ளது. வரிசையாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு சூர்யா நடித்துள்ள ‘மாஸ்’. இப்படம் வருகிற 29-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;