விஜய் படத்திற்கு ஜி.வி.யின் தர டிக்கெட் லோக்கல் பாட்டு!

விஜய் படத்திற்கு ஜி.வி.யின் தர டிக்கெட் லோக்கல் பாட்டு!

செய்திகள் 9-May-2015 1:03 PM IST VRC கருத்துக்கள்

விஜய்யின் ‘தலைவா’ படத்தை தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் அவரது 59-ஆவது படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசை அமைப்பாளர்! விஜய்யின் 59-ஆவது படமான இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் 50-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லியுடன் ஜி.வி. பிரகாஷ் இணைந்த ‘ராஜா ராணி’ பட பாடல்கள் ஹிட்டானது. அதைப்போலவே அட்லியுடன் விஜய் இணையவிருக்கும் படப் பாடல்களையும் ஹிட்டாக்க வேண்டும் என்ற முனைப்போடு படத்திற்கான பாடல் கம்போசிங்கை துவங்கி விட்டார் ஜி.வி.பிரகாஷ்! அதில் ஒரு சாங் குத்துப் பாடலாம்! அந்த குத்துப்பாடல் இதுவரை எந்த படத்திலும் வந்திராத வகையில் உலக லோக்கல் தர டிக்கெட் பாடலாக இருக்கும் என்றும், இப்பாடல் செல்ல குட்டீஸுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்! தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வரும் விஜய், இதன் படப்பிடிப்பு முடிந்ததும், அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;