பட ரிலீசுக்கு புதிய கட்டுப்பாடு!

பட ரிலீசுக்கு புதிய கட்டுப்பாடு!

செய்திகள் 9-May-2015 10:50 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலனுக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக இனி 15 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து தயாரிக்கப்படும் திரைப்படங்களை வருடத்தில் குறிப்பிட்ட 10 நாட்களில் மட்டும் தான் வெளியிட வேண்டும் என்று ஒரு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

சிறிய முதலீட்டு படங்களின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிரமத்தையும், அவர்களுகு ஏற்படும் பொருளாதார இழப்பையும் கருத்தில் கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையிலும், நமது சங்கத்தின் அடிப்படை நோக்கங்களை எண்.3(M)ன் படி தமிழ் திரைப்பட தொழில்லை பாதிக்கும் வியாபாரத்தன்மையை ஆராய்ந்து, ஏற்ற இறக்கங்களை பார்த்து வரும் ஆபத்துக்கள், மற்றும் அனுகூலங்களை தெரிந்துகொண்டு, அதற்கு தகுந்தார்போல் சங்கத்தில் எண்ணங்களை செயல்படுத்துகிற வகையில் செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் முடிவின்படி, ரூபாய் 15 கோடிக்கு மேல் உருவாகும் பெரிய முதலீட்டு திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர் 1.பொங்கல், 2.ஜனவரி 26, 3.ஏப்ரல்-14, 4.மே-1, 5.ஆகஸ்ட்-15, 6.வினாயகர் சதுர்த்தி, 7.விஜயதசமி, 8.தீபாவளி, 9.ரம்ஜான், 10.கிருஸ்துமஸ் ஆகிய 10 நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும், 15 கோடிக்கு கீழ் தயாரிக்கப்படும் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர் விரும்பும் எந்தவொரு நாட்களிலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சுயகட்டுப்பாடு ஒத்துழைப்பு என்பது வருகிற 2015 ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;