‘மாஸ்’ ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா!

‘மாஸ்’ ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா!

செய்திகள் 9-May-2015 10:39 AM IST Chandru கருத்துக்கள்

‘தெறிக்குது தெறிக்குது மாஸு...’ என ஊரெங்கும் ‘மாஸ்’ படத்தின் பாடல்கள் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வெங்கட் பிரபுவின் இந்த வித்தியாசமான ஹாரர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளிவந்து கிட்டத்தட்ட 25 லட்சம் பேருக்கு மேல் அதனை யு டியூப்பில் கண்டுகளித்தனர். தற்போது பாடல்களும் ஹிட் ஆகியிருப்பதால் சூர்யா உள்ளிட்ட ‘மாஸ்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக இப்படம் மே 15ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் கொஞ்சம் மீதம் உள்ளதால் இப்போது புதிய ரிலீஸ் தேதியை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார்.

தமிழ் ‘மாஸ்’ மற்றும் அதன் தெலுங்கு டப்பிங்கான ‘ரக்ஷ்சுடு’ இரண்டுமே உலகமெங்கும் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சூர்யா. அதோடு இன்று மாலை 5 மணிக்கு தனது ரசிகர்களுடன் ட்விட்டர் மூலமாக உரையாடவும் உள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் சூப்பர் சந்தோஷத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;