தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம்!

தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம்!

செய்திகள் 9-May-2015 10:19 AM IST VRC கருத்துக்கள்

டிஜிட்டல் கட்டண உயர்வை கண்டித்து தமிழ் திரையுலகினர் நாளை சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருக்கின்றனர். இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்து, கோடி கோடியாய் கொள்ளை அடித்து, திரையுகத்தை கபளீகரம் செய்யும், கியூப் மற்றும் யூ.எஃப்.ஓ (QUBE - UFO) போன்ற டிஜிட்டல் நிறுவனங்களை கண்டிக்கும் வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் திரையுலகத்தை சேர்ந்த முன்னோடிகள் அனைவரும் நாளை (10-5-15) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் உண்ணாவிரதம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடத்தவுள்ளார்கள். இதன் நோக்கம், தயாரிப்பாளர்களிடம் இருந்து திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான கட்டணத்தை அதிகமாகவும் பெற்றுக்கொண்டு அதன் மூலம் திரையரங்குகளில் விளம்பரம் மூலமாக சுமார் 400 கோடி ரூபாயை தயாரிப்பாளர்களுக்கு தர முறுப்பதுடன் QUBE, UFO மற்றும் ஒரு சில நிறுவனங்கள் பங்குப் போட்டுக் கொள்கின்றனர். இது தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்வாதாரத்தை நசுக்க நினைக்கும் செயல்.

மேற்கண்ட நிறுவனங்களின் செயலை தமிழக அரசுக்கு கொண்டு வரும் வகையிலும், தயாரிப்பாளகளுக்கு வரவேண்டிய சுமார் 400 கோடி ரூபாயை தர மறுக்கும் நிறுவனங்களை கண்டிக்கும் வகையிலும் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. தாயன்போடு வழிநடத்தும் மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் ஆசியோடு அந்த நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களையும், திரையுலகினரின் வாழ்வாதாரத்தையும் மீட்டுத்தருமாறு கேட்டுகொள்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;