தாயார் கோவிலுக்கு அடித்தளம் அமைக்கிறார் ராகவா லாரன்ஸ்!

தாயார் கோவிலுக்கு அடித்தளம் அமைக்கிறார் ராகவா லாரன்ஸ்!

செய்திகள் 8-May-2015 5:08 PM IST VRC கருத்துக்கள்

அன்னையின் அன்புக்கு மதிப்பே இல்லை என்பார்கள், அப்படிப்பட்ட தனது அம்மா கண்மணிக்கு நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கோயில் கட்டுகிறார். ஏற்கெனவே அம்பத்தூர் பகுதியில் ராகவேந்திரா கோயில் ஒன்றை கட்டியுள்ளார் ராகவா லாரன்ஸ். வருகிற ஞாயிற்று கிழமை அன்னையர் தினம்! இதனையொட்டி தான் கட்டியுள்ள ராகவேந்திரா கோயில் அருகிலேயே தனது தாய்க்கும் கோயில் கட்டுவதற்காக அடித்தளம் அமைக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ்! இந்த நிகழ்ச்சி ராகவா லாரன்ஸின் தாயார் கண்மணி முன்னிலையிலேயே நடைபெறவிருக்கிறது! உலகிலேயே வாழும் தாய்க்கு கோயில் கட்டப்படுவது இதுவே முதன் முறையாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;