‘பானு’விற்காக சுஜிபாலா குத்தாட்டம்!

‘பானு’விற்காக சுஜிபாலா குத்தாட்டம்!

செய்திகள் 8-May-2015 10:17 AM IST VRC கருத்துக்கள்

‘பசவா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘ஸ்ரீ கமல்தீப் பிச்சர்ஸ்’ இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பானு’. ஒரு நாத்திக வாலிபனுக்கும், ஒரு முஸ்லீம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டத்தை சித்தரிக்கும் திரைப்படமாம் ’பானு’. இப்படத்தில் கதாநாயகர்களாக ஜிவி. சீனு, உதயராஜ் அறிமுகமாகிறார்கள். இவர்களில் ஜி.வி.சீனு தான் இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். கதாநாயகியாக நந்தினிஸ்ரீ நடிக்கிறார். மேலும் ஜவஹர், கவிப்ரியா, நதிஷா, சுஜிபாலா, கோவை செந்தில், சிசர் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

5 பாடல்கள் இடம் பெறும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு சுஜிபாலா குத்தாட்டம் போட்டுள்ளார். அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையிலுள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. உதயராஜ் இசை அமைத்துள்ள இப்படத்திற்கு, அப்துல் ரஹ்மான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;