‘சுட்டகதை’ பாணியில் இன்னொரு பிளாக் காமெடி படம்!

‘சுட்டகதை’ பாணியில் இன்னொரு பிளாக் காமெடி படம்!

செய்திகள் 7-May-2015 4:30 PM IST VRC கருத்துக்கள்

‘கோல்டன் ஹார்ஸ் கிரியேஷன்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் சரண் சக்கரவர்த்தி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷா மோகன் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, ஓய்.ஜி. மகேந்திரன், சண்முகசுந்தரம், ஜார்ஜ் மரியம், ஜிகிர்தண்டா ராம்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மரியா ஜெரால்ட் இசை அமைக்கிறார். என்.கே.பதி, கௌதம் சேதுராம் ஆகிய இருவர் ஒளிப்பதிவு பணிகளை ஏற்றுள்ளனர்.

விஜயபிரகாஷ், சாக்ரடீஸ் ஆகிய இருவர் இணைந்து இப்பத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார்கள். இயக்குபவர் விஜய் பரமசிவம். குறும்பட இயக்குனரான விஜய் பரமசிவம் படம் குறித்து பேசும்போது,

‘‘இது முழுக்க முழுக்க காமெடி படம். ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘சுட்டகதை’, மாதிரியான பிளாக் காமெடி படம் இது. மிகப் பெரிய ஜமீன்தார் சண்முகசுந்தரம் ஒரு ரகசியத்தை சொல்லிவிட்டு இறந்து போகிறார். அதை கேட்ட சிலர் அந்த ரகசியத்தை வைத்து கோடிக்கணக்கான சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். இதனை நகைச்சுவையாக சொல்லும் படமே இது. இப்படத்தில் கையாளப்படும் பிளாக் காமெடி யுக்தி வரும் காலங்களில் நிறைய படங்களில் பயன்படுத்தப்படலாம்’’ என்றார் இயக்குனர் விஜய் பரமசிவம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;