துருக்கியிலும் ஹிட்டான அனிருத்தின் ‘கொலவெறி’ பாடல்!

துருக்கியிலும் ஹிட்டான அனிருத்தின் ‘கொலவெறி’ பாடல்!

செய்திகள் 7-May-2015 2:01 PM IST VRC கருத்துக்கள்

அனிருத் இசையில் தனுஷ் பாடி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான ‘வை திஸ் கொலவெறி’ பாடல் இப்போது துருக்கியிலும் பிரபலம்! துருக்கியில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘கொகோ கோலா’ குளிர்பான விளம்பர படத்தில் ‘வை திஸ் கொலவெறி’ பாடல் ட்யூனை தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்! 2 நிமிடம் 48 விநாடிகள் ஓடும் இந்த விளம்பர பாடலில் ஒரு கூட்டம் இளைஞர்களும், இளம் பெண்களும் ‘கொலவெறி’ பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடி அசத்தியிருக்கிறார்கள். சொல்லப் போனால் ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘கொலவெறி’ பாடலை விட, இந்த விளம்பர பாடல் சூப்பராக அமைந்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கும் இந்த விளம்பரமும், பாடலும் துருக்கி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;