தொடர்ந்து 23 நாட்கள் மழையில் படமாக்கப்பட்ட படம்!

தொடர்ந்து 23 நாட்கள் மழையில் படமாக்கப்பட்ட படம்!

செய்திகள் 7-May-2015 12:17 PM IST VRC கருத்துக்கள்

பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகிம் ராவுத்தர் தனது ‘இராவுத்தர் ஃபிலிம்ஸ்’ சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’. இப்படத்தில் பாடகர் கிரிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இயக்குனர்கள் ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக இருந்த தம்பி செய்யது இப்ராகிம் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றி இயக்குனர் தம்பி செய்யது இப்ராகிம் கூறியாதவது,

‘‘இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்மந்தப்பட்டது. எல்லோருக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக இருக்கும். அதில் சில விஷயங்களை சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்ல தயங்குகிற விஷயம்தான் இப்படத்தின் கரு. இந்த படத்திற்காக காட்சிகள் தொடர்ந்து 23 நாட்கள் மழையிலேயே எடுக்கப்பட்டது.

கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்திற்காகத்தான்! அதுவும் மரணம் சம்மந்தப்பட்ட பாடல்தான்! இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், மதுரை அம்பாசமுத்திரம், ராஜபாளையம், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹானா இசை அமைத்துள்ளார். ஆர். செந்தில்மாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - டிரைலர்


;