‘பாடி பில்டர்’களின் நகைச்சுவை கதை ‘கன்னா பின்னா’

‘பாடி பில்டர்’களின்  நகைச்சுவை  கதை ‘கன்னா பின்னா’

செய்திகள் 7-May-2015 12:22 PM IST VRC கருத்துக்கள்

சிவசுப்ரமணியன் , ஸ்ரீநிவாஸ் தயாரிப்பில் ‘ எஸ். எஸ். பிக் சினிமாஸ்’ வழங்கும் படம் ‘கன்னா பின்னா’. பொதுவாக ‘பாடிபில்டர்’களை சினிமாவில் அடியாள் கதாபாத்திரங்களுக்கும் வில்லன் கதாபாத்திரங்களுக்குமே பயன்படுத்தி வருகிறார்கள். அதிலிருந்து மாறுபட்டு முழுக்க, முழுக்க அனைத்து பாடி பில்டர்களையும் நகைச்சுவை கதாபாத்திரங்களாக நடிக்க வைத்து எடுக்கப்படும் படமாம் ‘கன்னா பின்னா’.

பார்ப்பதற்கு பிரம்மாண்டமான உடலமைப்பில் காட்சியளிக்கும் உடற்கட்டு வீரர்கள் பெரும்பாலும் குழந்தை தனமாகவும், நகைச்சுவையானவர்களாகவும் தான் இருக்கிறார்கள் . அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையைத்தான் இப்படம் சித்திரிக்கிறதாம்.
தமிழகம் முழுவதும் இருந்து நிறைய பாடி பில்டர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் . தமிழகம் , மற்றும் புதுவையில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். இப்படத்தை எழுதி, இயக்கி வரும் தியா, ‘கன்னா பின்னா’ படம் குறித்து பேசும்போது,

‘‘படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வருபவர்கள் கூட முதலில் ‘அடேங்கப்பா இவ்வளவு பாதுகாப்பு வீரர்களா ?’ என்று வியந்தனர்! அதன் பிறகே நடிப்பவர்கள் இவர்கள் தான் என்று தெரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நானும் ஒரு பாடி பில்டர் தான். அதுமட்டுமல்ல இப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர், நண்பர்கள் இருவரும் கூட பாடி பில்டர்கள்தான்! முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும்’’ என்றார் இயக்குனர் தியா.

இப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி ராவ் நடிக்க, ஜெரொல்ட் ராஜ மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ரோஷன் சேதுராமன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டீசர்


;