இசை அமைப்பாளர் சத்யாவுக்கு இளையராஜா பாராட்டு!

இசை அமைப்பாளர் சத்யாவுக்கு இளையராஜா பாராட்டு!

செய்திகள் 7-May-2015 11:42 AM IST VRC கருத்துக்கள்

கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா ‘ஆடுகிறான் கண்ணன்’ என்ற சீரியலுக்கு முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியக்களுக்கு இசையமைத்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா - 2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இப்போது ‘அசுரகுலம்’, ‘மானே தேனே பேயே’, ‘கிட்ணா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ‘அசுரகுலம் ’படத்தில் ‘பொல்லாத பொம்பள’ என்ற பாடலை நடிகர் தம்பி ராமைய்யாவை பாட வைத்திருக்கிறார். இதுவரை மென்மையான பாடல்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த சத்யா, ‘காஞ்சனா – 2’ படத்தில் இடம்பெற்று ஹிட்டான ‘சில்லாட்ட பில்லாட்ட’ பாடல் மூலம் தனக்கு குத்து பாடல்களுக்கும் இசை அமைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை பார்த்த இளையராஜா, கார்த்திக் ராஜா இருவரும் படத்தின் ரீ-ரெக்கார்டிங் ரொம்ப நல்லா இருக்கு என்று சத்யாவை பாராட்டியுள்ளார்கள். ‘‘இசைஞானி இளையராஜா பாராட்டியது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் இன்னும் சிறப்பாக இசையமைக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் தந்துள்ளது’’ என்கிறார் சத்யா. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் விரைவில் இசை ஆல்பம் ஒன்றையும் உருவாக்க உள்ளாராம் சத்யா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - டிரைலர்


;