40 நடன கலைஞர்களுடன் விஜய், ஹன்சிகா!

40 நடன கலைஞர்களுடன் விஜய், ஹன்சிகா!

செய்திகள் 7-May-2015 11:33 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டதை எட்டியுள்ளது. இப்படத்திற்கான பாடல் காட்சியை படமாக்க விஜய், ஹன்சிகா மோத்வானி, இயக்குனர் சிம்புதேவன், ஒளிப்பதிவாளர் நட்ராஜ், மற்றும் 40 நடன கலைஞர்கள் உட்பட படக்குழுவினர் கம்போடியா நாட்டுக்குச் சென்றுள்ளனர், அங்கு நேற்று துவங்கிய படப்பிடிப்பில் விஜய், ஹன்சிகாவுடன் 40 நடனக் கலைஞர்களும் பங்கேற்க, இப்போது பாடலை படமாக்கி வருகிறார்கள். இதுவரை யாரும் படமாக்காத லொகேஷன்களில் பாடல் காட்சி படமாகி வருகிறதாம். அங்கு தொடர்ந்து 12 நாட்கள் ‘புலி’யின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து சென்னை திரும்பவுள்ளனர் ‘புலி’ டீம்! இதனை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - மோஷன் போஸ்டர்


;