அஜித்துடன் இணையும் சூரி!

அஜித்துடன் இணையும் சூரி!

செய்திகள் 7-May-2015 10:54 AM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் சிவாவும் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் இன்று துவங்குகிறது. இப்படத்தின் காமெடி கேரக்டரில் சந்தானம் நடிக்க இருப்பதாக முதலில் பேசப்பட்டது. ஆனால் சந்தானம் வேறு படங்களில் மிகவும் பிசியாக இருப்பதால் அஜித்துடன் இப்படத்தில் நடிக்க அவரால் டேட்ஸ் ஒதுக்க முடியவில்லையாம். இதனால் அந்த கேரக்டருக்கு இப்போது சூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்! சூரி ஏற்கெனவே அஜித்துடன் ‘ஜி’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார் என்றாலும், சூரி ஒரு முழு நீள காமெடி நடிகரான பிறகு அஜித்துடன் நடிக்கும் முதல் படம் இது தான்! இப்படத்திற்காக அனிருத் இசையில் ஒரு பாடல் ரெடியாகி விட்டதும் என்றும், அஜித் பங்கேற்கும் அந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க, தங்கச்சி கேரக்டரில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;